
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பேராசிரியர் தனபாலன் மாநில அளவிலான மூன்றாவது தமிழ் வழக்கு வாத போட்டி - 2025 ஆனது ஜுலை 24 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்;நாடு முழுவதுமான 21 சட்டக் கல்லூரிகள் பங்கு பெற்றன. அவற்றில் புதுக்கோட்டை மதர்தெரசா சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் மு.லீனா ஸ்ரீஇ ஊ.பாண்டிமாதேவி மற்றும் யு.டீ.காந்திவிஜயசேகர் ஆகியோர் கலந்து கொண்டு திறம்பட போட்டியிட்டுஇ தங்களது வாத திறமையால் மாநில அளவில் இரண்டாம் பரிசினை வென்றனர். மேலும் சிறந்த பெண் வாதிடுபவருக்கான விருதை மாணவி மு.லீனா ஸ்ரீ பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சு.சின்னதம்பிஇ தாளாளர் சு.ஊ.உதயகுமார் மற்றும் பதிவாளர் ஆ. தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துகளையும் பாரட்டுகளையும் வழங்கி கௌரவித்தனர்.