• +91 - 9443372151, +91 - 9442293938
  • mtlcpdk2020@gmail.com

18 Dec 2025

INAUGURATION CEREMONY FOR LL.B. 2025 -2026 BATCH

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எல்.எல்.பி மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா 17.12.2025 அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

துவக்க விழாவிற்கு மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு. டாக்டர் சு. சின்னதம்பி மற்றும் தாளாளர் திரு.இரா.சி. உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தாளாளர் திரு.இரா.சி. உதயகுமார் சிறப்பு விருந்தினர் முன்னாள் அரசு வழக்குரைஞர் டி. கங்கை செல்வன், கல்லூரி முதல்வர் எஸ். மனோகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வகுப்புகளை துவக்கி வைத்தனர். முன்னதாக துவக்க விழாவிற்கு வந்த அனைவரையும் உதவி பேராசிரியர் எஸ். நக்கீரன் வரவேற்றார்.

தாளாளர் திரு.இரா.சி. உதயகுமார் அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில் மாணவர்கள் நல்முறையில் சட்டக் கல்வியினை பயின்று வருங்காலத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக திகழ வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் சிறப்பு விருந்தினர் அவர்கள் பேசுகையில் சட்டத்துறையில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு, சட்டம் சார்ந்த பணிகள் மற்றும் மாணவர்களுக்கான ஒழுக்க நெறி ஆகியவற்றை எடுத்துரைத்தார். முதல்வர் எஸ். மனோகரன் அவர்கள் பேசுகையில் சட்டக்கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலின் மகத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

துணை முதல்வர் என்.எம். நவ்ஷாத் அலி, உதவி பேராசிரியர்கள் எஸ். சுபாஷினி, கே. ஜெயக்குமாரி மற்றும்; ஏ. அபுதாகிர் மற்றும் நூலக உதவியாளர் எல். மோகனா உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா நிறைவில் துணை முதல்வர் என்.எம். நவ்ஷாத் அலி நன்றியுரை வழங்கினார்.