• +91 - 9443372151, +91 - 9442293938
  • mtlcpdk2020@gmail.com

20 Dec 2025

Inter Law Collegiate Ball Badminton (Men) & Basketball (Men) Tournament for the academic year 2025 – 2026

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் 20.12.2025 அன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் பிரிவினருக்கான கூடைப் பந்தாட்டம் & பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டி நிகழ்வுகளுக்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு.ஆர். சின்னத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார். மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. இரா.சி. உதயகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழகத்தில்  உள்ள 11 சட்டக் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விளையாட்டு போட்டிகளை திருச்சி  மாண்புமிகு சிறப்பு மாவட்ட நீதிபதி திருமதி.சி.கார்த்திகா அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக முன்னால் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவினருக்கான கூடைப் பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை சென்னை சீர்மிகு சட்டப் பள்ளியும், இரண்டாம் இடத்தை சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியும் வென்றன. ஆண்கள் பிரிவினருக்கான பூப்பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியும், இரண்டாம் இடத்தை மதுரை அரசு சட்டக் கல்லூரியும் வென்றன.

பின்னர் பரிசளிப்பு விழாவில் மணப்பாறை மாண்புமிகு சார்பு நீதிபதி திரு.எஸ். ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை வழங்கினார்.

மேலும் நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர், தாளாளர் திரு. இரா.சி. உதயகுமார், பதிவாளர் திரு.எம். தினேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினர். மதர்தெரசா சட்டக் கல்லூரி முதல்வர் திரு.எஸ். மனோகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

விளையாட்டுப் போட்டிகளை மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குனர் திரு.பி.மகேந்திரன் உடற்கல்வி உதவி இயக்குனர் திரு.எஸ். சண்முகம் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சட்டக் கல்லூரி துணை முதல்வர்  என்.எம்.நவ்ஷாத் அலி, உதவிப்பேராசிரியர்கள் ஏ.அபுதாஹிர், எஸ். சுபாஷினி மற்றும் உதவி பேராசிரியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.