• +91 - 9443372151, +91 - 9442293938
  • mtlcpdk2020@gmail.com

28 Oct 2025

Special Lecture On: "Basic Aspect in Civil Practice

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் 24.09.2025 (புதன் கிழமை) “Basic Aspect in Civil Practice” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் சி. திருமூர்த்தி அவர்கள் மாணவர்களுக்கு உரிமையியல் வழக்கின் நீதிமன்ற நடைமுறை, வழக்கின் படிநிலை, வாதுரைகள் வரைதலில் கையாள வேண்டிய விஷயங்கள், பத்திரங்களை பதிவு செய்தல் மற்றும் சான்றொப்பத்தின் பொறுப்புநிலை ஆகியவை குறித்து சிறப்பு விரிவுரை வழங்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதில் வழங்கினார். நிகழ்வில் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.