
நமது மதர் தெரசா சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு எல்.எல்.பி படிக்கும் மாணவர்கள் லட்சுமணன், விக்னேஷ்வரன் மற்றும் 5-ம் ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிக்கும் மாணவர் சுரேஷ் ஆகியோர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் நடத்திய தேசிய அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற வழக்காடு போட்டியில் வெற்றிகரமாக கலந்து கொண்டு காலிறுதி வரை முன்னேறி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மதிப்பிற்குரிய பி.பி.பாலாஜி அவர்களிடமிருந்து சிறந்த வாதுரைக்கான விருதையும், சிறந்த ஆராய்ச்சியாளருக்கான போட்டியில் நமது மதர் தெரசா சட்ட கல்லூரி 5-ம் ஆண்டு மாணவர் சுரேஷ் இரண்டாம் இடமும்,தமிழக அளவில் பங்கேற்ற 38 கல்லூரிகளில் நமது மதர் தெரசா சட்ட கல்லூரி மாணவர்கள் 5-ம் இடம் பிடித்து சாதனை படைத்து நமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.